கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள சிவசெல்வி அடகு கடையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுதா என்ற பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 8, 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அந்த அடகு கடையில் சுதா போலி நகைகளை அடகு வைத்து சுமார் ரூ.1.50 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். இந்நிலையில், இன்று மீண்டும் அவர் அதே கடைக்கு வந்தபோது, நகைகள் போலியானவை என்பதை அறிந்த உரிமையாளர் ராஜாராம் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் சுதாவைப் பிடித்துள்ளனர்.
பின்னர் அவரை ஒரு தனி அறைக்குள் அழைத்து சென்று அங்கு தடியால் கொடூரமாகத் தாக்கியதில் சுதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
