சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கழிவறைகளுடன் கூடிய ஓய்வறைகள் 200 வார்டுகளிலும் 25.95 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க டிசம்பர் 20 நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி நாய்களை வளர்த்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல், ராட்வீலர் நாய்களை வீட்டுக்கு வெளியே அழைத்துச் செல்லும்போது கழுத்து பட்டை மற்றும் வாய் கவசம் அணிவது கட்டாயமாகும். இதனைப் பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற சென்னையில் இன்றே கடைசி நாள் ஆகும். நாளை முதல் வீடு வீடாக ஆய்வு செய்த உரிமம் பெறாத செல்லப் பிராணிகளில் உரிமையாளர்களுக்கு 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
