18 நாட்கள் கோமாவில் கிடந்தேன்… 48 தையல் போட்டிருந்தாங்க… ஆர்ஜே அர்ச்சனா சொன்ன அதிர்ச்சி தகவல்!

By Elango on மார்கழி 19, 2025

Spread the love

சின்னத்திரை ஆர்ஜே வாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா. டாக்டர் மாஸ்க் மெட்ராஸ் மேட்னி வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஆர்ஜே அர்ச்சனா கூறியதாவது, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் எனக்கு அறுவை சிகிச்சை ஒன்று நடந்தது. அப்போது எனக்கு மூக்கு தண்டவடத்தில் எனக்கு எலும்பு கிடையாது. உடைந்து விட்டது. மூக்கு இடது கண் பகுதிகளில் உள்ள நரம்புகள் கட் ஆகி விட்டது.

அதனால் எனக்கு கண்ணில் தண்ணீர் வராது. எனக்கு சுத்தமான டேஸ்ட் தெரியாது. சுவாசித்தால் மூக்கில் மணம் தெரியாது. மல்லிகை பூவை கொடுத்தால் எனக்கு வாசனை தெரியாது. அந்த பாதிப்பு இப்போது எனக்கு இல்லை. எனக்கு அப்போது 39 வயது. இது 2021ம் ஆண்டில் நடந்தது. அப்போது நான் அழுதால் ஒரு கண்ணில் இருந்துதான் தண்ணீர் வரும். எனக்கு அப்போது ஒரு சர்ஜரி நடந்தது. என் முகம் முழுக்க 48 தையல் போட்டு முகம் முழுக்க அடைச்சி வெச்சிருக்காங்க.

   

டாக்டர் என்னை ரொம்பவும் ஸ்ட்ரெயின் பண்ணிக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க. ஆனால் நான் 48வது நாளில் வேலைக்கு போயிட்டேன். நான் நல்லா இருக்கிறேன் என்று முதலில் என் மூளையை நான் நம்ப வைக்கணும். அது ரொம்ப முக்கியம். 18 நாட்கள் எனக்கு எதுவுமே நினைவில் இல்லை. நான் முழுக்க கோமாவில்தான் இருந்தேன். அப்போது நடந்தது எதுவுமே எனக்கு நினைவில் இல்லை என்று நடிகை ஆர்ஜே அர்ச்சனா கூறியிருக்கிறார்.