“இனிமேலும் என்னால் முடியாது” மனைவியின் நம்பிக்கை துரோகத்தை காட்டிக்கொடுத்த GPS கருவி… கையும் களவுமாக பிடித்தபோது கண்ணீர் விட்டு அழுத கணவர்…!!

By Soundarya on மார்கழி 19, 2025

Spread the love
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், கணவர் ஒருவர் தனது மனைவியின் ஸ்கூட்டரில் ரகசியமாகப் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் (GPS) கருவியின் உதவியுடன், அவரது கள்ளத்தொடர்பைக் கண்டுபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமிர்தசரஸைச் சேர்ந்த தொழிலதிபர் ரவி என்பவருக்கு, தனது மனைவி ஹிமானியின் நடத்தையில் ஏற்கனவே சந்தேகம் இருந்துள்ளது. இதன் காரணமாக, ரவி தனது மனைவியின் ஸ்கூட்டரில் யாருக்கும் தெரியாமல் ஒரு ஜிபிஎஸ் டிராக்கரைப் பொருத்தியுள்ளார்.
சம்பவத்தன்று மதியம் சுமார் 3:30 மணியளவில் ஹிமானி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததாலும், ரவி செய்த 15-20 அழைப்புகளுக்குப் பதில் அளிக்காமல் தொலைபேசியை அணைத்து வைத்திருந்ததாலும் ரவியின் சந்தேகம் வலுவடைந்தது.
உடனடியாக ரவி தனது மொபைலில் ஸ்கூட்டரின் ஜிபிஎஸ் இருப்பிடத்தைச் (Location) சரிபார்த்தார். ஜிபிஎஸ் காட்டிய இடத்திற்குச் சென்றபோது, அவரது மனைவி வேறொரு நபருடன் இருப்பதை ரவி கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.

<

/div>

சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், ரவி தனது வேதனையை உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். தனக்கும் ஹிமானிக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 14 ஆண்டுகால இந்தத் திருமண வாழ்க்கையைக் காப்பாற்ற தான் எவ்வளவோ போராடியதாகவும், ஆனால் தற்போதைய சூழ்நிலை அனைத்தையும் மாற்றிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த வீடியோவில் ரவி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, பல இடங்களில் கண்ணீர் விட்டு அழுவதைக் காண முடிகிறது. “இந்த உறவைச் சரிசெய்ய என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன், ஆனால் இனி இதற்கு மேல் என்னால் முடியாது; வேறு வழியே இல்லை” என்று அவர் விரக்தியுடன் பேசியுள்ளார்.