தமிழ் சினிமாவில் நீ வருவாய் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜகுமாரன். அவரை நடிகை தேவயானி காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். தேவயானி பிரபல முன்னணி நடிகையாக இருந்தும் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தேவயானி – ராஜகுமாரன் உருவ ஒற்றுமை குறித்து பலர் அப்போது விமர்சித்தாலும் இந்த தம்பதி நல்ல ஒற்றுமையுடன் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் மீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது தேவயானியிடம் எப்படி இவரை கல்யாணம் பண்ணினீங்கன்னு மட்டும் கேக்குறீங்களே? ஆனா தேவயானியை ஒரு ராணியாகவே வெச்சிருக்க நான் எவ்வளவு இழந்திருப்பேன். ஏன் யாருமே அதை யோசிக்க மாட்டேங்கிறீங்க?
நான் ஒரு இடத்துக்கு வாய்ப்பு கேட்டு கதை சொல்ல போய் இருப்பேன். என்னடா தேவயானி புருஷன் தினமும் வர்ராருன்னு சொல்லிடுவாங்களோனு போய் இருக்க மாட்டேன். விஜய் அஜீத் எனக்கு நல்ல நண்பர்கள்தான். ஆனால் அவர்களை போய் பார்த்தால் தேவயானி கணவர் வந்துட்டு கெஞ்சிகிட்டு இருக்காருன்னு சொல்லுவாங்கன்னு யோசிச்சு அதெல்லாம் விட்டு இருக்கேன். இப்படி தேவயானிக்காக நான் நிறைய இழந்திருக்கேன் என்று இயக்குனர் ராஜகுமாரன் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.
