திடீர் ஷாக்..! அதிமுகவில் மொத்தமாக இணைந்த முக்கிய புள்ளி… கெத்து காட்டும் EPS..!!

By Soundarya on மார்கழி 18, 2025

Spread the love

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளைத் தனது தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைத்து முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். செங்கோட்டையனின் இந்த நகர்வுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேரடியாகக் களமிறங்கியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் மகுடேஸ்வரன் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் இன்று அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அதிமுக கட்சித் துண்டு அணிவித்து இபிஎஸ் உற்சாகமாக வரவேற்றார். செங்கோட்டையனின் வியூகத்தை முறியடிக்க அதிமுக தலைமை எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.