நடிகர் விஜய் நடிப்பில் தி கோட் படப்பிடிப்பு நடந்த போதே, இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிப்பது என உறுதியாகி இருந்தது. அதனால்தான் வெங்கட்பிரபு, தனது தி கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயனை விஜயுடன் நடிக்க வைத்தார். ஆனால் தி கோட் படத்துக்கு பிறகு ஒரு ஆண்டாகியும் இன்னும் வெங்கட்பிரபு எஸ்கே நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கவே இல்லை.
ஏனெனில் அதற்குள் மதராஸி மற்றும் பராசக்தி படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் சென்றுவிட்டார். அதனால் சிவகார்த்திகேயனுக்கு கடந்த ஓராண்டாக வெங்கட்பிரபு எஸ்கேவுக்காக காத்திருந்தார். இப்போது படப்பிடிப்பை துவங்க வெங்கட்பிரபு திட்டமிட்டிருந்த நிலையில், ஏற்கனவே கமிட் ஆன இயக்குனர் சிபி சக்ரவர்த்தி படத்தில் உடனே நடிக்குமாறு பேஷன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் சுதன், சிவகார்த்திகேயனிடம் பேசியிருக்கிறார்.
முதலிலேயே சிபி சக்ரவர்த்தி படத்தில் நடித்துவிட்டு தான் வெங்கட்பிரபு இயக்கத்தில் எஸ்கே நடிக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் பைனான்ஸ் பிரச்னை காரணமாக அந்த படம் துவங்க தாமதமாகும் என்றதால் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க முன்வந்தார். இப்போது தனது தயாரிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் முதலில் நடிக்குமாறு சிவகார்த்திகேயனை தயாரிப்பாளர் சுதன் நெருக்கடி தருவதால், அந்த படத்துக்கு பிறகுதான் எஸ்கே வெங்கட்பிரபு படத்தில் நடிக்கும் நிலை உருவாகி உள்ளது. ஓராண்டுக்கு பின் படப்பிடிப்பை துவங்க இருந்த நிலையில், சோதனை மேல் சோதனைடா சாமி என இயக்குனர் வெங்கட்பிரபு நொந்து போய் இருக்கிறார்.
