“செல்போனை திருடிய வாலிபர்…” பகையை மனதில் வைத்து நண்பர்கள் செய்த பயங்கரம்…. இப்படியும் இருப்பாங்களா…?

By Devi Ramu on மார்கழி 18, 2025

Spread the love

கோவை மாவட்டம் சூலூர் அருகே, பழைய செல்போன் திருட்டுச் சம்பவத்திற்காக வாலிபர் ஒருவரை அவரது நண்பர்களே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி பரத், ஒரு வருடத்திற்கு முன்பு தனது நண்பர் கோகுலின் கடையில் வேலை செய்தபோது ஒரு விலையுயர்ந்த கைபேசியைத் திருடியதாகக் கூறப்படுகிறது. இந்த பழைய பகையை மனதில் வைத்திருந்த கோகுல், தனது மற்ற இரு நண்பர்களுடன் இணைந்து கடந்த திங்கட்கிழமை இரவு பரத்தை அவரது வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார்.

அப்பகுதியில் உள்ள சுடுகாடு காத்திருப்போர் அறைக்கு அழைத்து சென்று அந்த மூன்று பேரும் சரமாரியாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மறுநாள் காலை பரத்தின் சடலத்தைக் மீட்ட போலீசார், சந்தேகத்தின் பேரில் அவரது நண்பர்களான கோகுல், விக்னேஷ் மற்றும் சபரீசன் ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர். சிறு திருட்டிற்காகப் பல ஆண்டுகால நட்பையும் மறந்து ஆத்திரத்தில் கொலையில் ஈடுபட்ட அந்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.