ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர், தொகுதி மேம்பாட்டு நிதி (MLA-LAD) ஒதுக்கீட்டில் 40% கமிஷன் கேட்டது ஒரு ரகசிய ஸ்டிங் ஆபரேஷன் (Sting Operation) மூலம் அம்பலமாகியுள்ளது. இதுபோன்ற ஊழல்கள் நீண்டகாலமாக நடப்பதுதான் என்றாலும், இப்போது அது வீடியோ ஆதாரமாக வெளிவந்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள ஒரு கசப்பான உண்மை உள்ளது. உதாரணத்திற்கு, ஒரு கிராமத்தின் சாலைப் பணிக்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். வேலை தொடங்குவதற்கு முன்பே 40 லட்சம் ரூபாயை எம்.எல்.ஏ அல்லது எம்.பி-க்கள் சுருட்டி விடுகிறார்கள்.
A BJP MLA from Rajasthan was caught in a sting operation demanding a 40% commission to approve a project under the MLA-LAD fund, something long known to happen, but now on video.
Take a simple example: if a road project worth ₹1 crore is approved for a village, ₹40 lakh is… pic.twitter.com/AGOna5M1vu
— THE SKIN DOCTOR (@theskindoctor13) December 16, 2025
மீதமுள்ள 60 லட்சத்திலும் பொதுப்பணித்துறை (PWD) அதிகாரிகள், மாவட்ட-வட்டார அலுவலர்கள், இடைத்தரகர்கள் மற்றும் தணிக்கை அதிகாரிகளுக்குப் போக வேண்டிய ‘கமிஷன்’ கைமாறுகிறது. இத்தனைக்கும் பிறகு ஒப்பந்ததாரர் தனது லாபத்தையும் எடுத்துக்கொண்டால், கடைசியில் சாலை போடப்படும் இடத்திற்குச் சென்று சேருவது வெறும் 10 லட்சம் ரூபாய் மட்டுமே. தரமற்ற இடுபொருட்களைக் கொண்டு போடப்படும் அந்தச் சாலைகள் சில மாதங்களிலேயே சிதிலமடைவதற்கு இதுவே முதன்மையான காரணம்.
