ஈரோட்டில் நடைபெற உள்ள தவெக கூட்டத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்த இளைஞருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அந்த இளைஞருக்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகளை உடனடியாக வழங்கினர். தாமதமின்றி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கூட்ட நெரிசல் மற்றும் வெயிலில் நீண்ட நேரம் நடக்கும்போது இது போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குடை அல்லது தொப்பி அணிவது நல்லது. உடல்நிலை சரியில்லை எனத் தோன்றினால் உடனடியாக அருகிலுள்ள தன்னார்வலர்கள் அல்லது போலீசாரைத் தொடர்பு கொள்ளவும்.
