காதல் உறவை முறித்துக்கொண்ட நடிகர் சரத்குமார்…. 50 வயது கடந்தும் முரட்டு சிங்கிளாக வாழும் பிரபல நடிகை!

By Elango on மார்கழி 18, 2025

Spread the love

நடிகர் சரத்குமார் 70 வயதுகள் கடந்தும் இன்னும் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார். டியூட் படத்தை தொடர்ந்து அவர் கொம்பு சீவி படத்தில் நடித்திருக்கிறார், கடந்த 1984ம் ஆண்டில் சாயாதேவி என்பவரை சரத்குமார் காதல் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு வரலட்சுமி மற்றும் ஒரு மகள் உள்ளனர். நடிகை நக்மாவுடன் சரத்குமார் சில படங்களில் நடித்த போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இந்த பிரச்னையால் சாயா, சரத்குமாரை பிரிந்த நிலையில் 2000ம் ஆண்டில் அவர்கள் விவாகரத்து பெற்றனர்.

சரத்குமார் – சாயா பிரிவுக்கு நக்மா தான் காரணம் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சரத்குமாரை விட்டு நக்மா பிரிந்தார். அதன்பிறகு நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவை கடந்த 2001ம் ஆண்டில் 2வது திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் நடிகை நக்மா, நடிகர் சரத்குமாரை பிரிந்த நிலையில் 50 வயதுகளை கடந்தும் இன்னும் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். நடிகை ஜோதிகாவின் அக்கா நக்மா என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் பாட்ஷா வில்லாதி வில்லன் காதலன் மேட்டுக்குடி பிஸ்தா என பல படங்களில் நாயகியாக நடித்தவர் நக்மா என்பது குறிப்பிடத்தக்கது.