விடுமுறை ஸ்பெஷல் ரயில்கள் முன்பதிவு… இன்னும் சற்றுநேரத்தில்… மக்களே ரெடியா..?

By Soundarya on மார்கழி 18, 2025

Spread the love

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, அரையாண்டு விடுமுறையையொட்டி, சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06049): டிசம்பர் 28 (சனிக்கிழமை) மற்றும் ஜனவரி 4 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் இயக்கப்படும். திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் (06050): டிசம்பர் 29 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஜனவரி 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கவுள்ளது. விடுமுறை காலத்தில் பயணம் செய்ய விரும்புவோர் IRCTC இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் உடனடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.