2026 தேர்தல்…. ஜெயலலிதா தொகுதியில் களமிறங்கும் பிரபல நடிகை…. அதிமுக போடும் பக்கா பிளான்…!!

By Soundarya on மார்கழி 18, 2025

Spread the love

அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராகப் பணியாற்றி வரும் நடிகை காயத்ரி ரகுராம், எதிர்வரும் தேர்தலில் சென்னை மயிலாப்பூர் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம், சமீபகாலமாக கட்சியின் போராட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான ஸ்ரீரங்கத்தில் போட்டியிட அவர் அதிக ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது