ஈரோட்டில் டிசம்பர் 18-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், “முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைவார்களா?” என்ற கேள்விக்கு “பொறுத்திருந்து பாருங்கள்” என்ற பதில், பெரும் சஸ்பென்ஸை ஏற்படுத்தி, பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
மேலும் முன்னாள் அமைச்சர்கள் அல்லது பிற முக்கிய பிரமுகர்கள் இணைவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “யாரும் வர வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை, எல்லோரும் மக்கள் சந்திப்புக்கு வர வேண்டும். இணைப்பு குறித்த தகவல்களுக்குப் பொறுத்திருந்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, அதிமுக அல்லது பிற கட்சிகளைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்கள் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியிலும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது. அந்த மக்கள் சந்திப்பு நிகழ்வின் போது முக்கிய அரசியல் நகர்வுகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
