விவசாயிகளே…! வங்கி கணக்கில் ரூ.2,000… தமிழக அரசு கொடுத்த முக்கிய அப்டேட்…!

By Soundarya on மார்கழி 16, 2025

Spread the love
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாகத் தலா ₹2,000 வீதம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் அடுத்த தவணைப் பணம் 2026 பிப்ரவரி மாதத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற அல்லது புதிதாக இணைந்துகொள்ள விரும்பும் விவசாயிகள், தங்கள் ‘விவசாய அடையாள எண்ணை’ (Farmer ID) கண்டிப்பாகப் பதிவு செய்யுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு ஆதார் அட்டை, நில உரிமை ஆவணங்கள் (பட்டா), ஆகியவற்றுடன் அருகிலுள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகம் அல்லது வேளாண்மைத் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து, விவசாய அடையாள எண்ணைப் பதிவு செய்து திட்டத்தில் இணைந்துகொள்ளலாம்.