இணையத்தில் தினந்தோறும் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்தவகையில் இரண்டு சிறுவர்கள் சைக்கிளில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது திடீரென சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பி நிலைதடுமாறி, பள்ளத்தை நோக்கிச் சறுக்கிச் சென்றபோது, அதைப் பார்த்த அண்ணன் சிறிதும் தாமதிக்காமல், தன் உயிரைப் பணயம் வைத்து, அவனை நோக்கிப் பாய்ந்து காப்பாற்றினான்.
తమ్ముడు సైకిల్పై అదుపు తప్పి ప్రమాదం వైపు జారుతున్న క్రమంలో, అన్నయ్య ఒక్క సెకను కూడా ఆలోచించకుండా తన ప్రాణాలను పణంగా పెట్టి అతడిని కాపాడేందుకు ముందుకు దూకాడు. ‘అన్నకు తమ్ముడు బలం, తమ్ముడికి అన్న ధైర్యం’ అనే మాటలను నిజం చేస్తూ ఉన్న ఈ వీడియో ప్రస్తుతం సోషల్ మీడియాలో వైరల్… pic.twitter.com/E3VWt08Y2b
— ChotaNews App (@ChotaNewsApp) December 16, 2025
‘அண்ணனுக்கு தம்பி பலம், தம்பிக்கு அண்ணன் தைரியம்’ என்ற பழமொழியை நிரூபிக்கும் வகையில் அமைந்த இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அண்ணன்-தம்பி பாசத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
