பாலியல் விவகாரம் வழக்கு… அவரது பக்கமே நான் நிற்கிறேன்… அதுவே அறம் – இயக்குனர் அமீர் வெளியிட்ட திடீர் பதிவு!

By Elango on மார்கழி 16, 2025

Spread the love

பிரபல நடிகை பாலியல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். இதுகுறித்து நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் பிரபல நடிகையுமான மஞ்சுவாரியர் தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். அவர் வெளியிட்ட ஒரு வலைதள பதிவில், மதிப்பிற்குரிய நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். ஆனால் இந்த விஷயத்தில் முழுமையான நீதி கிடைக்கவில்லை. ஏனென்றால் குற்றம் செய்தவர்கள் மட்டுமே இப்போது தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இதை திட்டமிட்டவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பது ஒரு பயமுறுத்தும் உண்மை. அவர்கள் தண்டிக்கப்படும்போதுதான் உயிர் வாழ்வதற்கான நீதி முழுமை அடையும் என்று அதில் நடிகை மஞ்சு வாரியர் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் அமீர் இதுகுறித்து தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை செய்திருக்கிறார். அந்த பதிவில், பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்பதே அறம். தீர்ப்புகள் எல்லாம் நீதியாகி விடாது. மஞ்சுவாரியரின் பக்கமே நான் நிற்கிறேன் என்று அமீர் அதில் கூறியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.