தெலுங்கு படங்களில் பணத்துக்காக வேலை செய்கிறாரா அனிருத்? பிரபல இசையைமப்பாளர் தமன் எழுப்பிய பகிரங்க குற்றச்சாட்டு!

By Elango on மார்கழி 16, 2025

Spread the love

இசையமைப்பாளர் தமன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது தமன் கூறியதாவது, அனிருத்துக்கு எளிதாக தெலுங்கில் பட வாய்ப்புகள் கிடைக்கிறது. அவர் இப்போது நிறைய தெலுங்கு படங்களுக்கு இசையமைக்கிறார். ஆனால் எனக்கு தமிழ் படங்களில் இசையமைக்க வாய்ப்புகளே இல்லை. தமிழ் சினிமாவில் காணப்படும் ஒரு வலுவான ஒற்றுமை தெலுங்கு சினிமாவில் சுத்தமாக இல்லை.

பிற மொழி இசையமைப்பாளர்கள் தெலுங்கு சினிமாவில் அதிகமாக சம்பாதிக்கின்றனர். அவர்கள் தெலுங்கு படங்கள் மீதான விருப்பத்தால் வேலை செய்யவில்லை. பணத்திற்காக மட்டுமே வேலை செய்கிறார்கள் என்று இசையமைப்பாளர் தமன், மறைமுகமாக அனிருத்தை சுட்டிக்காட்டி விமர்சித்து பேசியிருக்கிறார்.

   

அதே நேரத்தில் தெலுங்கு சினிமாவில் திறமையாளர் மற்றும் புதிய இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்புகள் இல்லை என்பது குறித்தும் தமன் வருத்தப்பட்டுள்ளார். இசையமைப்பாளர் தமன் தமிழை காட்டிலும் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். குறிப்பாக அகண்டா 2 தி ராஜா சாப் போன்ற தமன் இசையமைத்த படங்கள் தெலுங்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.