பொங்கல் ரேஸில் விஜயுடன் களத்தில் மோத தயாரான நடிகர் சிவகார்த்திகேயன் – திடீர் என பின்வாங்கிய ஏன்? – பராசக்தி ரிலீஸ் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

By Elango on மார்கழி 16, 2025

Spread the love

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் வருகிற ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிக அதிகமாக காணப்படுகிறது. ஜனநாயகன் படத்தில் இசை வெளியீட்டு விழா வருகிற 27ம் தேதி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் மிகவும் விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வருகிற ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஜனவரி 9ம் தேதி அல்லது 10ம் தேதி வெளியாகும் என்ற தகவல் பரவியது. அதனால் விஜய் – சிவகார்த்திகேயன் படங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன என்ற கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

   

ஆனால் இப்போது பராசக்தி படம் ஏற்கனவே அறிவித்தபடி ஜனவரி 14ம் தேதி தமிழ்நாட்டில் மட்டும் ரிலீஸாகும். ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் 3 பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் காரணமாக போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் ஒரு வாரம் கழித்து ஜனவரி 23 அல்லது 24ம் தேதி அந்த மாநிலங்களில் பராசக்தி தெலுங்கு வெர்சன் ரிலீஸாகும் என படக்குழு தரப்பில் தகவல் வௌியாகி உள்ளது.