தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பல வியூகங்களை வகுத்து வருகின்றது. தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை அதிமுகவிலிருந்து தொடர்ந்து நீக்கிவரும் இபிஎஸ் தேர்தல் பணிகளை தற்போது தீவிர படுத்தியுள்ளார்.
இதனிடையே 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமான படிவங்களை பெற ஏராளமான நிர்வாகிகள் நேற்று குவிந்தனர். அதிமுகவில் 349 மனுக்கள் இபிஎஸ் தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என வழங்கப்பட்டுள்ளது அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. முதல் நாளில் மட்டும் 1237 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது. அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில் இபிஎஸ்- கான இந்த வரவேற்பு அரசியல் களத்தில் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது.
