தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்… குடும்ப அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

By Devi Ramu on மார்கழி 15, 2025

Spread the love

தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவற்றுடன், ஒரு லிட்டர் பாமாயில் மற்றும் ஒரு கிலோ துவரம் பருப்பு மானிய விலையில் வழங்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு 2026 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதன் காரணமாக, தமிழக அரசு தேர்தலுக்கு முன்னதாகவே மூன்று மாதங்களுக்குத் தேவையான ரேஷன் பொருட்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.

   

இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், இந்த மூன்று மாதங்களுக்கான 6 கோடி பாமாயில் பாக்கெட்டுகள், 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு மற்றும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் சர்க்கரை ஆகியவற்றைத் தனியாரிடம் இருந்து ஒப்பந்தம் மூலம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியுள்ளது.

   

தேர்தல் பணிகள் நடைபெறும் சமயத்தில் அரசு ஊழியர்கள் அதில் கவனம் செலுத்துவார்கள் என்பதால், பொதுமக்களுக்கான ரேஷன் பொருள் விநியோகத்தில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக அரசு இந்த முன்கூட்டிய கொள்முதல் நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் மூலம், தேர்தல் நடக்கும் காலத்திலும் நியாய விலைக் கடைகளில் மக்களுக்குத் தேவையான பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.