“குழந்தையும் இல்ல, நாம ஓடிப் போயிடலாம்”… எதிர்வீட்டு இளைஞரால் ஏமாந்த பெண்… வீட்டுக்கு வந்த பால் வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி… காட்டுக்குள் இரவில் நடந்த சம்பவம்…!

By Nanthini on மார்கழி 15, 2025

Spread the love

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சேர்ந்த சீதா என்பவருக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆன நிலையில் இவருடைய கணவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். சீதாவின் கணவர் காலை 5:00 மணிக்கு வியாபாரத்திற்கு சென்றால் திரும்பி வர பத்து மணி ஆகிவிடும். மேலும் இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்றும் தெரிகிறது. இதனிடையே எதிர் வீட்டில் வசிக்கும் மோகித் என்ற நபருடன் சீதா பேசத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய இவர்களின் பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறி உள்ளது. அதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததால் இந்த விஷயம் சீதாவின் கணவருக்கு தெரிய வந்தது.

உடனே தன் மனைவியை அவர் சரமாரியாக தாக்கி கண்டித்துள்ளார். இதனால் கணவரிடமிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று நினைத்த சீதா மோகித்திடம், நான் எங்கிருந்து சென்று விடுவோம், உன் மனைவியை விட்டுவிட்டு வந்துவிடு என்று வற்புறுத்தியுள்ளார். இதனால் மோகித் ஒரு மோசமான திட்டத்தை தீட்டி உள்ளார். தனக்கும் எதிர்வீட்டு பெண்ணுக்கும் இடையே உள்ள உறவு குறித்து தன் மனைவியிடம் பேசிய மோஹித், சீதா என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார், ஆனால் அவர் பணக்காரி, அவளைக் கொன்றுவிட்டு அவள் வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டே எங்கேயாவது சென்று மகிழ்ச்சியாக வாழலாம் என்று யோசனை கொடுத்துள்ளார்.

   

கணவரின் மோசமான யோசனைக்கு ஒப்புக்கொண்ட மோகித் மனைவி சீதாவை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். அன்று வழக்கம் போல சீதாவின் கணவர் பால் வியாபாரத்திற்கு அதிகாலையிலேயே சென்றுவிட மோகித்தின் மனைவி சீதாவிடம் சென்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பின் வாசல் வழியாக வந்த மோஹித் சீதாவை சரமாரியாக குத்தி கொன்றார். அதன் பிறகு அங்கிருந்து தப்பிய இருவரும் பக்கத்து கிராமத்தில் பதுங்கியுள்ளனர். வேலைக்கு சென்று விட்டு திரும்பிய கணவன் மனைவியை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் மூழ்கினார்.

   

உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சீதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு விசாரணையை தொடங்கிய போலீசார் எதிர் வீட்டில் இருந்த ஜோடி திடீரென காணாமல் போனதை அறிந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். பிறகு கொலை நடந்த இடத்தில் இருவருடைய துணிகளும் கிடந்ததால் அவர்கள் இருவரின் தொலைபேசி எண்ணை டிரேஸ் செய்த போலீசார் பக்கத்து கிராமத்தில் இருந்த இருவரையும் கைது செய்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டபோது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பால் வியாபாரி மனைவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.