தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழகத்தை டார்கெட் செய்துள்ளது. என்னதான் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் சில முக்கிய முடிவுகளை பாஜக தான் தற்போதும் எடுத்து வருகின்றது. அதே சமயம் விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியிலும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இப்படியான நிலையில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திர நேற்று டெல்லி சென்று இருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது தமிழகத்தில் பாஜக தனிப்பட்ட செல்வாக்குடன் இருக்கும் 50 தொகுதிகள், கூட்டணியுடன் வெல்ல வாய்ப்புள்ள 15 தொகுதிகள் என மொத்தம் 65 தொகுதிகளின் பட்டியலை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பரமக்குடி, நாங்குநேரி, கோவை வடக்கு, பல்லடம், மயிலாப்பூர், தி நகர், குமரி, நெல்லை, மதுரை வடக்கு உள்ளிட்ட தொகுதிகள் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.
