நாடு முழுவதும் இருக்கும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் கட்டாயம் இனி e-KYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும். இது தொடர்பான அறிவிப்பை உணவு பாதுகாப்பு அமைச்சகமும் மத்திய அரசும் வெளியிட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் சரியான நேரத்தில் இ-கேஒய்சி அப்டேட்டை முடிக்காவிட்டால் அவர்களின் ரேஷன் அட்டைகள் செயலிழக்கக்கூடும். அதனுடன் அரசாங்கம் வழங்கி வரும் உணவு தானியங்கள் அல்லது சலுகைகளையும் பெற முடியாமல் போகலாம்.
எனவே ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு தகுதி உள்ள ஒவ்வொரு குடும்பமும் இந்த செயல்முறையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்திருக்க வேண்டும். அரசு வழங்கியுள்ள காலக்கெடுவை தவறவிட்டால் ரேஷன் பொருள்கள் கிடைக்காது. இ கேஒய்சி செயல்முறைக்கு ரேஷன் அட்டைதாரர்களிடம் முக்கிய ஆவணங்கள் இருக்க வேண்டும். அவற்றில் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், மொபைல் எண் ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும்.
அதே சமயம் செல்போன் மூலமாகவும் கேஒய்சி அப்டேட்டை முடிப்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மொபைல் போன் மூலம் வீட்டிலிருந்தே ரேஷன் கார்டு e-KYC செயல்முறையை பூரத்தி செய்ய முடியும். ‘மேரா KYC’ மற்றும் ‘ஃபேஸ் RD’ போன்ற அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களைப் பயன்படுத்தலாம். எனவே இதனை முடிக்காவிட்டால் இனி ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிக்கலாகிவிடும்.
