சர்க்கரை நோயாளிகளுக்காக ஓசம்பிக் என்ற மருந்தை டென்மார்க்கைச் சேர்ந்த நோவோ நோர்டிஸ்க் என்ற மருந்து நிறுவனம், இந்த வாராந்திர ஊசி மருந்தினை டிசம்பர் 12, 2025 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிக்க, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் கூடுதலாகப் பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மருந்தில் உள்ள ‘செமகுளுடைட்’ (semaglutide) என்ற செயலில் உள்ள மூலப்பொருள், உடலில் இயற்கையாக சுரக்கும் GLP-1 என்ற ஹார்மோனைப் போலவே செயல்படுகிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், பசியைக் குறைக்கவும் உதவுகிறது. இது வாரத்திற்கு ஒருமுறை தோலுக்கு அடியில் செலுத்தக்கூடிய ஊசி வடிவில் கிடைக்கிறது. 0.25 மி.கி, 0.5 மி.கி மற்றும் 1 மி.கி ஆகிய மூன்று வெவ்வேறு வலிமைகளில் (dosages) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆரம்பக்கால டோஸ் (0.25 மி.கி) ஒரு வாரத்திற்கு தோராயமாக ரூ.2,200 என்ற விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் இது எடை குறைப்பு மருந்து என்று அறியப்பட்டாலும், இந்தியாவில் இதன் அதிகாரப்பூர்வ ஒப்புதல் சர்க்கரை நோய் மேலாண்மைக்கு மட்டுமே. மருத்துவரின் பரிந்துரையின் பேரிலேயே இதனைப் பயன்படுத்த வேண்டும். இந்த மருந்தை ஒரு மருத்துவரின் மேற்பார்வையுடனும் பரிந்துரையுடனும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
