நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மத அடிப்படையிலான அரசியலையும், பிரதான திராவிடக் கட்சிகளின் தேர்தல் நடைமுறைகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார். “மதத்தை போற்றுகிறீர்கள், ஆனால் இங்கே மனிதனைப் போற்றுகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்கள் வாழும் நாடாக மாற்ற முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நாங்கள் இதனை மனிதன் வாழும் நாடாக உருவாக்க நினைக்கின்றோம்” என்று தனது கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
வாக்குக்காக காசு கொடுக்காமல் போட்டியிடும் துணிச்சல் திமுக, அதிமுகவுக்கு இருக்கிறதா?” என்று சவால் விடுத்துள்ளார். திமுக அரசுக்கு எதிராக தினமும் போராட்டங்கள் நடைபெற்று வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீமானின் இந்தக் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
