ஐயோ, என் புருஷன் விஷம் குடிச்சிட்டான்… மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடிய மனைவி… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை… திருமணமான நான்கே மாதத்தில் நடந்த கொடூரம்..!

By Nanthini on மார்கழி 14, 2025

Spread the love

ஈரோடு மாவட்டம் கிழக்கு திண்டல் பகுதியை சேர்ந்த 21 வயதான கட்டுமான தொழிலாளி மதன்குமார் என்பவருக்கும் அவருடைய உறவினரான 19 வயது சுசித்ரா என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் மதன்குமார் மது போதையில் வீட்டுக்கு வந்து அடிக்கடி மனைவியுடன் சண்டை போட்டு உள்ளார். அதன்படி கடந்த ஐந்தாம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தன்னுடைய தாய் வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு சுஜித்ரா கேட்ட நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

இதனால் ஒருவருக்கொருவர் மாறி மாறி கழுத்தை பிடித்து நெரித்துள்ளனர். அப்போது சுஜித்ரா தள்ளி விட்டதில் கீழே விழுந்த மதன்குமார் பேச்சு மூச்சு இல்லாமல் அப்படியே கிடந்துள்ளார். இதனால் பதறிப்போன சுஜித்ரா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். நடந்த சம்பவத்தை மறைத்து கணவர் விஷம் குடித்து விட்டதாக சுஜித்ரா கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மதன்குமார் கடந்த 11ஆம் தேதி உயிரிழந்தார்.

   

பிரேத பரிசோதனைக்கு பிறகு அவருடைய சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகளும் முடிக்கப்பட்டன. இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் மதன்குமார் கழுத்து நெறிக்கப்பட்டு இருப்பதும் பின் தலையில் அடிபட்டதில் மூளையில் ரத்த உறைந்திருப்பதும் மரணத்திற்கு காரணம் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சுஜித்ரா உண்மையை ஒப்புக்கொண்டார். தற்போது அவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.