திடீர் திருப்பம்..! “என்னை பற்றி தப்பா கேள்விப்பட்டா” நடிகை ராஜேஸ்வரி தற்கொலையில் வெளியான அதிர்ச்சி வீடியோ..!

By Soundarya on மார்கழி 14, 2025

Spread the love

சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரியின் தற்கொலை வழக்கில் அவர் தனது கடைசி நாட்களில் மிகுந்த மனவேதனையில் இருந்ததை வெளிப்படுத்தும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கணவர் சதீஷுக்கும், ராஜேஸ்வரிக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. சமீபத்திய தகராறு காரணமாக, அவர் கோபித்துக்கொண்டு சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக வீட்டின் குத்தகை பணம் ரூ.13 லட்சத்தை பயன்படுத்த ராஜேஸ்வரி திட்டமிட்டதாகவும், அதற்கு கணவர் ஒப்புக்கொள்ளாததால் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் அதிகப்படியான இரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற ராஜேஸ்வரி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

இந்நிலையில் வெளியாகியுள்ள வீடியோவில், “என்னை பற்றி தப்பா கேள்விப்பட்டா தயவு செஞ்சு நம்பிடுங்க. நான் அப்படி இல்லைன்னு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை; அதுக்கு டைமும் இல்லை. நான் கெட்டவளாவே இருந்துக்கிறேன்” என்று அவர் வேதனையுடன் பேசியுள்ளார்.