புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கி அதன் கொடியை லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் இன்று அறிமுகம் செய்து வைத்துள்ளார். நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் கையில் வேலேந்திய சிங்கம், 6 நட்சத்திரங்கள் மற்றும் நெற்கதிருடன் LJK என பதிக்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சி கொடி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கட்சிக் கொடிக்கு மும்மத பூஜை செய்யப்பட்டது. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தமிழக வெற்றி கழகம் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனனின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.
