BIG BREAKING: சற்றுமுன் அதிமுகவிலிருந்து விலகிய முக்கிய புள்ளி… கூண்டோடு தவெகவில் ஐக்கியம்… செம ஷாக்கில் இபிஎஸ்…!

By Nanthini on மார்கழி 14, 2025

Spread the love

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே உட்கட்சி பூசல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து குரல் எழுப்பிய செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அவரை தொடர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ விபி பெரியசாமியின் அண்ணன் அருணாச்சலம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தனர்.

வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி விஜய் ஈரோட்டில் பரப்புரை மேற்கொள்ளதால் பெரும் கூட்டத்தை கூட்ட செங்கோட்டையன் தீவிரமாக பணியாற்றி வருகிறார். அதேசமயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டையனின் அண்ணன் மகன் கேகே செல்வம் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.