ராகுல் காந்திக்கு போன சீக்ரெட் பைல்… தவெகவுடன் கூட்டணி வைப்பதே ஒரே வழி… திமுகவை ஓரம் கட்டி விஜய்யிடம் செல்லும் காங்கிரஸ்…!!!

By Nanthini on மார்கழி 14, 2025

Spread the love

தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி பற்றிய புது கணிப்புகளும் வியூகங்களும் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியில் தொடர்வோம் என்று ராகுல் காந்தியும் தொடர்ந்து கூறி வந்தாலும் சில தலைவர்கள் மட்டும் விஜயின் தமிழக வெற்றிக்கலகம் கட்சியை நோக்கி திரும்ப பார்க்கிறார்கள் என்பது அரசியல் பரபரப்பின் மையம். நீண்டகாலமாக திமுக கூட்டணியில் இருந்ததால் கொஞ்சமும் கை கொடுக்காத நிலை என்றும் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாத சூழல் என்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளன.

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சி காணவில்லை என்பதை அவர்களுடைய குற்றச்சாட்டு. இதனால் தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் கூட்டணி வைப்பதே எதிர்கால வலிமை என்று வாதம் உருவாகியுள்ளது. ஒருவேளை காங்கிரஸ் விஜய் கட்சியுடன் இணையாவிட்டால் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி உருவாகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

   

அப்படி நடந்தால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கு பெரிதாக பலன் இல்லை என்றும் அந்த சில தலைவர்கள் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் விஜயின் பிரபலமும் கேரளா மற்றும் புதுச்சேரி வரை பரவியுள்ள ரசிகர்கள் கூட்டமும் காங்கிரசுக்கு புதிய வாய்ப்புகளை தர கூடும் என்று கணிக்கப்படுகிறது. இருந்தாலும் இன்னும் சில நாட்களில் காங்கிரஸ் தனது கூட்டணி குறித்த நிலைப்பாட்டை வெளியிடும் என தெரிகிறது.