தனியாக இருந்த பள்ளி மாணவி… திடீரென வீட்டுக்குள் நுழைந்த பக்கத்து வீட்டு வாலிபர்… கதவைத் திறந்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

By Nanthini on மார்கழி 14, 2025

Spread the love

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகின்றார். மாணவியின் தாயார் அரசுத் துறையில் வேலை பார்த்து வருகின்றார். இதனிடையே மாணவியின் பக்கத்து வீட்டை சேர்ந்த மாரிமுத்து என்ற வாலிபருக்கு திருமணம் முடிந்து மனைவி உள்ளார். இப்படியான நிலையில் அந்த நபர் சிறுமியை காதலிப்பதாக கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருந்த சமயத்தில் அவருடைய வீட்டுக்கு மாரிமுத்து சென்றுள்ளார்.

சம்பவத்தன்று வேலை முடிந்து மாணவியின் தாய் வீட்டுக்கு வந்த போது அங்கு மாரிமுத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். என்னுடைய வீட்டுக்கு ஏன் வந்தாய் என்று கேட்டு மாரிமுத்து விடம் அவர் தகராறு செய்துள்ளார். பிறகு தனது மகளிடம் விசாரித்த போது ஒரு வருடமாக காதலிப்பதாக கூறி மாரிமுத்து பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்ததாகவும் ஒரு நாள் திடீரென்று கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததுடன் அதனை ரகசியமாக படம் எடுத்து மிரட்டி வருவதாகவும் மாணவி அழுது கொண்டே கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியின் தாய் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் தற்போது மாரிமுத்துவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.