2026 தேர்தல்… தமிழகத்தில் பெண்களின் வாக்கை கவர ஸ்டாலின் போட்ட புதிய திட்டம்… வெளிவந்த சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on மார்கழி 13, 2025

Spread the love

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பீகாரில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்து காங்கிரஸ் மண்ணை கவ்வியது. இதனால் காங்கிரஸ் மீது திமுகவிற்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் என்றைக்கும் இல்லாத அளவில் இந்த முறை பெண்களின் வாக்கு சதவீதம் என்பது பீகாரில் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண்களின் வங்கி கணக்குகளில் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டதுதான். அதேபோல திமுகவும் புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது பெண்களை கவர அவர்களின் வங்கி கணக்குக்கு 15,000 ரூபாயை அனுப்ப உள்ளதாகவும் இது தொடர்பாக ஆலோசனை நடைபெற்ற வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலமாக பெண்கள் வாக்கு வங்கி அதிகரிப்பதோடு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை திமுக தக்க வைத்துக்கொள்ள முடியும். ஆனால் பெண்களுக்கு திமுக கட்டணமில்லாத பேருந்து மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. இருந்தாலும் பாஜக மற்ற மாநிலத்தில் செய்த தேர்தல் சூழ்ச்சியை திமுக தன் வசப்படுத்தி தமிழகத்தில் செயல்படுத்த தயாராக உள்ளதாம். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.