ரூ.30 லட்சம் சம்பள வேலையை தூக்கி எறிந்த சென்னை பெண்… அவரே சொன்ன காரணம்… இணையத்தை அலறவிடும் வைரல் வீடியோ…!

By Nanthini on மார்கழி 13, 2025

Spread the love

சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பிரபல கார்ப்பரேட் நிறுவனத்தில் வருடத்திற்கு 30 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் அந்த வேலையை விட்டு விட்டதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கல்வி கற்று ஒரு நல்ல வேலை கிடைத்து, சொந்தமாக வீடு கட்டி திருமணமும் செய்து வாழ்ந்து வந்த நிலையிலும் ஏதோ வாழ்க்கையில் மிஸ் ஆவதை உணர்ந்ததாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். பயணம் செய்தல் மற்றும் மலையேறுதல் போன்ற விஷயங்களில் ஆர்வம் கொண்ட அந்த பெண் வார இறுதிகளில் அத்தனை விஷயங்களில் ஈடுபடுவதும் மற்ற நாட்களில் தினமும் காலை முதல் மாலை வரை ஒரே வேலையை செய்வதாக வேண்டியுள்ளதே என்ற ரீதியிலும் யோசிக்க தொடங்கியுள்ளார்.

எனவே தனக்கு பிடித்த வாழ்க்கையை தொடங்குவதற்காக தன்னுடைய முழு நேர வேலையை விட்டு விட்டதாக தெரிவித்துள்ள அவர் ஐந்து வருடங்கள் ஆனாலும் வேலை, ஆனால் அப்போது இதே இளமையும் சக்தியும் இருக்குமா என்ற கேள்வி எழுப்புகின்றார். தனக்கு பிடித்ததை செய்ய தனக்காக வாழ முடிவெடுத்த அந்த பெண்ணுக்கு பலரும் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Vanathi S | Travel 🌋 பதிவைப் பகிர்ந்துள்ளார் (@theuntoldtrails)