“நான் சாகப் போறேன், என் பிள்ளையை மட்டும் நல்லா பாத்துக்கோங்க”… வாட்ஸ் அப்பில் வந்த ஸ்டேட்டஸ்… வீட்டுக்கு பதறி அடித்து ஓடிய எஸ்ஐ… மனைவி எடுத்த விபரீத முடிவு..!

By Nanthini on மார்கழி 13, 2025

Spread the love

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த அருண் (28) என்பவர் சாத்தூர் நகர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். இவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்த இளவரசி என்ற பெண்ணை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் அனன்யா என்ற பெண் குழந்தையும் உள்ளது. சாத்தூர் பாரதி நகரில் வாடகை வீட்டில் அருண் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இதனிடையே அருண் நேற்று ஆளுநர் நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவருடைய செல்போனில் மனைவி இளவரசியின் whatsapp ஸ்டேட்டஸ் இல், குழந்தையை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளவும், நன்றாக படிக்க வைக்கவும்.. நான் செல்கிறேன் என்று பதிவிட்டதை பார்த்து பதற்றம் அடைந்த அருண் உடனே வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக ஊட்டப்பட்டிருந்தது. உடனே கதவை உடைத்து திறந்து பார்த்தபோது இளவரசி சேலையால் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

   

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருண் உடனே காவல்துறையினர் உதவியுடன் உடலை கீழே இறக்கி மருத்துவமனைக்கி அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்ந்து காவல் ஆய்வாளரின் மனைவி உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.