திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு மாணவிகள் வகுப்பறையில் மது அருந்திய சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்படி ஆறு மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் . சக மாணவி ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், மாணவிகளுக்கு மதுபானம் விற்பனை செய்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
