ஜனவரியில் தமிழக மக்களுக்கு ஜாக்பாட்.. வங்கிக்கணக்கிற்கு வருகிறது ரூ.4,000..? செம குட் நியூஸ்…!!

By Soundarya on மார்கழி 13, 2025

Spread the love

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹3,000 ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ₹3,000 ரொக்க உதவி வழங்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது 2.25 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்களைச் சென்றடைய வாய்ப்புள்ளது.

பொங்கல் பரிசுத் தொகையாக ₹3,000 வழங்கப்பட்டால், மகளிர் உரிமைத் தொகையான ₹1,000 உடன் சேர்த்து, தகுதியுள்ள பெண்களுக்கு மொத்தமாக ₹4,000 வங்கிக் கணக்கில் கிடைக்கும் என்ற தகவல் பரவி வருகிறது.