தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார் . 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதே இந்த சந்திப்புகளின் முதன்மை நோக்கம் என்று சொல்லப்படுகிறது.
அதிமுகவுடனான கூட்டணி நிலைமை, குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டணி குறித்து முடிவெடுக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள சூழலில், இது முக்கியத்துவம் பெறுகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைப்பது தொடர்பாகவும் இந்த சந்திப்புகளில் விவாதிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
