பள்ளியிலிருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்ற மாணவன்… திடீரென ரயில் முன் பாய்ந்து தலை துண்டாகி துடி துடித்து பலி… நொடி பொழுதில் நடந்த துயர சம்பவம்…!

By Nanthini on மார்கழி 13, 2025

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே உள்ள தோக்கம்பூர் கிராமத்தை சேர்ந்த தங்கமணி என்ற கூலி தொழிலாளியின் மகன் பூவரசன் (17. இவர் அங்குள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகின்றார். இதனிடையே நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற பூவரசன் மாலை வீட்டுக்கு செல்லாமல் ஆரம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்று உள்ளார். அங்கு மின்சார ரயில்கள் வந்து செல்லும் நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திர மாநிலம் சூலூர் பேட்டை செல்லும் மின்சார ரயில் ஒன்று ஆரம்பக்கம் ரயில் நிலைய நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது.

நடைமேடையில் நின்று கொண்டிருந்த பூவரசன் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென்று தண்டவாளத்தில் குதித்து ரயில் முன் பாய்ந்தார். இதில் தலை துண்டாகி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்த பயணிகள் அனைவரும் இதனை கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.