“அக்கா… அவர் என்னை…” தங்கை சொன்ன வார்த்தை…! பக்கத்துவீட்டுகாரரை தீர்த்து கட்டிய அக்கா… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on மார்கழி 12, 2025

Spread the love

கடலூர் பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்த பிரசாத் (41) என்பவர், தனது பக்கத்து வீட்டுப் பெண்ணான அபிதா (22) என்பவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்தத் தொல்லை குறித்து அபிதா, தனது அக்கா கவிப்ரியாவிடம் (24) கூறியுள்ளார். கவிப்ரியா தனது கணவர் முத்துக்குமரன் (30) என்பவருடன் சேர்ந்து பிரசாத்தை பலமுறை கண்டித்துள்ளார்.

 சம்பவத்தன்று மாலை மதுபோதையில் இருந்த பிரசாத், கவிப்ரியாவிடம் தகராறு செய்துள்ளார். மேலும், தனது தங்கைக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கண்டிக்கச் சென்ற கவிப்ரியா மற்றும் முத்துக்குமரனையும் கடுமையாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

   

இதனால் ஆத்திரமடைந்த கவிப்ரியாவும் அவரது கணவரும் சேர்ந்து பிரசாத்தைத் தாக்கி, கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். கொலை நடந்த அன்றிரவே கவிப்ரியா திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். தனது தங்கைக்கு ஏற்பட்ட தொல்லை மற்றும் பிரசாத்தின் மிரட்டல் காரணமாகவே கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் கவிப்ரியாவையும், தலைமறைவாக இருந்த அவரது கணவர் முத்துக்குமரனையும் கைது செய்தனர்.