மத்திய இடைநிலை கல்வி வாரியம் 2026 ஆம் ஆண்டு முதல் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக பல முக்கிய மாற்றங்களை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2026 முதல் CBSE ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வுகளை நடத்தும். பிப்ரவரி மாதத்தில் நடக்கும் முதன்மை தேர்வுக்கு பிறகு தேவைப்படுபவர்கள் மே மாதத்தில் மூன்று பாடங்களை மட்டும் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களை உறுதி செய்ய முடியும்.
வினாத்தாளில் 50 சதவீதம் திறனறி கேள்விகள், 20% அப்ஜெக்டிவ் கேள்விகள், 30 சதவீதம் சிறு மற்றும் பெரிய பதிலளிக்கும் கேள்விகள் இடம்பெறும். அதே சமயம் 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 25% வருகை பதிவு கட்டாயமாகும். வருகின்ற 2026 முதல் 9 புள்ளிகளைக் கொண்ட புதிய மதிப்பிடும் முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
