இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்களின் மனநிலை என்பது ஒரு சிறிய விஷயத்திற்கு கூட தற்கொலை முடிவை நாடும் நிலையில்தான் உள்ளது. பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி சிறிதாக யாராவது ஒரு வார்த்தையை சொல்லிவிட்டால் உடனே தற்கொலை என்ற எண்ணம் தான் மாணவர்கள் மத்தியில் வந்து விடுகிறது. அப்படி ஒரு துயர சம்பவம் தான் உத்திரபிரதேசம் மாநிலம் குஷி நகர் மாவட்டத்தில் நடந்துள்ளது. குஷி நகர் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் உத்கர்ஷ் ஷர்மா (15) என்ற சிறுவன் தேர்வுக்கு படிக்காததை காரணமாக கொண்டு தாய் கண்டித்ததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
மாமா வீட்டில் தங்கி படித்து வந்த அவர் நேற்று முன் தினம் காலை 9 மணி அளவில் ஏற்பட்ட இந்த சம்பவத்திற்கு பிறகு வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார். மன அழுத்தத்தில் இருந்த சிறுவன் மாடியில் உள்ள ஒரு அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். உடனே சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் கதவை உடைத்த போது சிறுவன் உயிரற்ற நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
