ஐயோ நெஞ்சே பதறுது… பெற்றோருக்கு நடுவில் படுத்திருந்த பிறந்து 23 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை… நொடி பொழுதில் நடந்த துயர சம்பவம்..!

By Nanthini on மார்கழி 12, 2025

Spread the love

உத்திரபிரதேச மாநிலத்தில் தாய் தந்தைக்கு நடுவில் படுத்து இருந்த பச்சிளம் குழந்தை உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் பெற்றோருக்கு அருகில் தூங்கிக் கொண்டிருந்த 23 நாட்களே ஆன குழந்தை ஒன்று தற்செயலாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருமணம் ஆகி நான்கு வருடங்களுக்குப் பிறகு குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சியில் இருந்த அந்த குடும்பம் தற்போது குழந்தை பறிபோனதால் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

குழந்தையின் பெற்றோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென்று நடுவில் கண்விழித்துப் பார்த்தபோது குழந்தை எந்தவித அசைவும் இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார். குழந்தை தற்செயலாக நசுக்கப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.