அரியலூர் மாவட்டம் ஓட்ட கோவில் கிராமத்தை சேர்ந்த ரகுபதி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டிலஷ்மி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் ஆறு வயதில் லோகேஷன் என்ற மகனும் 2 வயதில் கமலேஷ் என்ற மகனும் உள்ளனர். ரகுபதி திருமணத்திற்கு முன்பு தன்னுடைய சொந்த ஊரில் கூடி தொழில் செய்து வந்த நிலையில் பிறகு மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்பூருக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்த நிலையில் பாண்டிலஷ்மி வீட்டுக்கு அருகில் உள்ள அழகு நிலையத்தில் பியூட்டிஷியன் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதனிடையே ரகுபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓட்ட கோவில் கிராமத்திற்கு வந்த நிலையில் பாக்கியலட்சுமி மீண்டும் திருப்பூரில் குழந்தைகளுடன் தங்கி வேலை செய்தார். பின்னர் அவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் பாண்டிய லட்சுமிக்கு மற்றொருவருடன் தகாத உறவு இருப்பதாக கூறி கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாண்டிலஷ்மி ஓட்ட கோவிலுக்கு வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது இரண்டு மகன்கள் உடன் அருகில் உள்ள கிராமத்தில் இருக்கும் ஏரிக்கரையில் பெரிய மகனை கரையில் உட்கார வைத்துவிட்டு தன்னுடைய இளைய மகனை இடுப்பில் கட்டிக்கொண்டு ஏரியில் குதித்தார். இதனைப் பார்த்த கரையில் அமர்ந்திருந்த மகன் தனது தாயார் வராததை கண்டு அழுவதை பார்த்த கிராம மக்கள் அவரிடம் விசாரித்த போது நடந்ததை கூறினார்.
இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாண்டிய லட்சுமி மற்றும் அவருடைய இளைய மகன் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு மூத்த மகனிடம் இருந்த பாண்டி லட்சுமியின் செல்போனை வாங்கி பார்த்த போது அதில், எனது கடைசி புகைப்படம் என்றும் என் சாவுக்கு இந்த ஆள் தான் காரணம் என்று ஒருவரின் புகைப்படத்தை தன்னுடைய பேஸ்புக்கில் பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தற்போது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
