“நீதான் எனக்கு பொண்டாட்டி” 5 வருடமாக இளம்பெண்ணுடன் லிவிங் டு கெதர் முறையில் குடும்பம் நடத்திய வாலிபர்… இறுதியில் நடந்த டுவிஸ்ட்…!

By Nanthini on மார்கழி 12, 2025

Spread the love

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் சென்னை அரும்பாக்கத்தில் அழகு நிலையம் நடத்தி வருகின்றார். இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு கல்லல் அருகே வெற்றியூர் பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு சென்ற போது அவருடைய சகோதரியின் வீட்டுக்கு அருகே வசித்து வந்த பெரியசாமி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். பிறகு பெரியசாமிக்கு சென்னையில் வேலை கிடைத்த நிலையில் அம்பத்தூரில் வாடகைக்கு வீட்டை எடுத்து அதில் பெரிய சாமியும் இளம் பெண்ணும் ஒன்றாக வசித்து வந்தனர். சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக இருவரும் லிவிங் டு கெதர் முறையில் ஒன்றாக வசித்து வந்த நிலையில் பெரியசாமியின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்துள்ளனர்.

இதனால் பெற்றோரை சமாதானம் செய்துவிட்டு வருவதாக சொந்த ஊருக்கு பெரியசாமி புறப்பட்டு சென்ற நிலையில் அவர் சென்னைக்கு திரும்ப வில்லை. இந்நிலையில் பெரிய சாமிக்கு வேறொரு பெண்ணுடன் விராலிமலையில் திருமணம் நடைபெற இருப்பதாக அந்த இளம் பெண்ணுக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த இளம் பெண் விராலை மலைக்குச் சென்று பெரியசாமிக்கு பார்த்த பெண் வீட்டாரிடம் தங்களுடைய காதல் மற்றும் ஐந்து வருட வாழ்க்கை குறித்து எடுத்துக் கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினார். அதன் பிறகு இளம் பெண்ணை தொடர்பு கொண்ட பெரியசாமியின் பெற்றோர் சமரசமாக செல்லலாம் நாங்களே திருமணம் செய்து வைக்கிறோம்.

   

ஆனால் அதன் பிறகு அரசியல் பிரமுகர் ஒருவரின் தலையீட்டின் பேரில் பெரியசாமி ரகசிய இடம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. தன் காதலனை சந்தித்து பேச முடியாத விரக்தியில் அந்த இளம் பெண் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.