இந்த 5 கீரைகளை நீங்க அடிக்கடி சாப்பிடுங்க… அந்த 5 உறுப்புகளும் உங்களுக்கு வேற லெவலில் ஆரோக்கியமாக இருக்கும் – என்னென்ன கீரைகள் தெரியுமா?

By Elango on மார்கழி 12, 2025

Spread the love

உடல் ஆரோக்கியத்தை காட்டிலும் இந்த உலகத்தில் மிகப்பெரிய செல்வம் எதுவும் இருக்க முடியாது. அந்த வகையில் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் 5 வகையான கீரைகள் குறித்து இப்போது தெரிந்து கொள்வோம்.

வல்லாரை கீரை – மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு உதவும் கீரை வல்லாரைக் கீரை. மூளையில் உள்ள நரம்புகளை வலுப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த கீரை. இதனுடன் தினமும் இரண்டு வால்நட் எடுத்துக் கொள்வது மூளையின் செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது.

   

கரிசலாங்கண்ணி கீரை – தலை முடிக்கு ஆரோக்கியம் தரும் கீரை கரிசலாங்கண்ணி கீரை. கரிசலாங்கண்ணி கீரையோடு சேர்த்து பூசணி விதைகளும் உணவில் சேர்த்துக் கொண்டால் தலைமுடி நன்றாக வளரும்.

   

அகத்திக்கீரை – கண்கள் ஆரோக்கியத்திற்கான கேரட் மிகவும் உதவுகிறது. ஏனென்றால் வைட்டமின் ஏ கேரட்டில் அதிகமாக உள்ளது. அதேபோல் கீரை வகைகளில் அகத்திக்கீரை வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்தது. அதனால் அகத்திக்கீரை சாப்பிடுவது கண்களை பாதுகாக்கும்.

 

முருங்கை கீரை – பற்களின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் தேவை. பற்களை பாதுகாக்கும் கீரை என்றால் அது முருங்கைக்கீரை தான். அதில் கால்சியம் சத்து நிறைந்து இருக்கிறது.

பொன்னாங்கன்னி கீரை – சரும பொலிவுக்கு ஏற்ற கீரை என்றால் அது பொன்னாங்கண்ணி கீரை. பொன் போன்ற மேனிக்கு பொன்னாங்கண்ணி என்று ஒரு பழமொழியே இருக்கிறது.
இந்த 5 வகை கீரைகள் மட்டுமின்றி எல்லா வகை கீரைகளிலுமே ஏதேனும் ஒரு விதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. அதனால் கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வளமான வாழ்வை தரும்.