தெலுங்கு படம் ஒன்றில் வில்லனாக நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி? 20 நாட்கள் கால்ஷீட்டுக்கு அவர் வாங்கும் சம்பளம் இத்தனை கோடிகளா? – ஷாக் ஆன ரசிகர்கள்!

By Elango on மார்கழி 12, 2025

Spread the love

தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, கடந்த சில மாதங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ஒரு புதிய படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில் இப்போது 2வது ஷூட்டிங் ஷெட்யூல் துவங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதி இப்போது பங்கேற்று நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கேரக்டரில் நடிப்பது உறுதியாகி உள்ளது. மொத்தம் 20 நாட்கள் மட்டுமே இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கால்ஷீட் தந்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் அவரது சம்பளம் ரூ. 20 கோடி பேசப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் என்கிற ரீதியில் சம்பளம் வாங்குகிறார். ரொம்பவும் காஸ்ட்லியான வில்லனாக மக்கள் செல்வன் மாறிவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.