சென்னை மூலக்கடை பகுதியில் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் நேற்று புழல் கேம்ப் பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். பிறகு தன்னுடைய வீட்டுக்கு செல்வதற்காக அங்கு பேருந்துக்காக காத்திருந்த சமயத்தில் அந்த வழியாக வந்த லாரியை சிறுமியின் அருகில் நிறுத்திய டிரைவர் தான் மூல கடைக்கு தான் லாரியை ஓட்டி செல்வதாக லாரியில் ஏறினால் கொண்டு சென்று விடுவதாகவும் கூறியுள்ளார். அதனை நம்பிய சிறுமி லாரியில் ஏறியுள்ளார். லாரி சிறிது தூரம் சென்றதும் சாலை ஓரம் நிறுத்திய டிரைவர் சிறுமியை லாரியில் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். டிரைவரிடம் இருந்து தப்பி வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இது பற்றி வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து லாரி பதிவு எண்ணை வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த சிவராமன் (35) என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது தற்போது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
