திருவள்ளுவர் அருகே குழந்தை இல்லாத வீரத்தினால் பெண் ஒருவர் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தேவந்தவாக்கம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவருடைய மனைவி ஜூலி என்ற ஜெகதாம்பாள். இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகும் நிலையில் குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் ஜூலிக்கு இதயப் பிரச்சனை இருந்து வந்ததால் அவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. ஒரு பக்கம் குழந்தை இல்லாத விரத்தியும் மறுபக்கம் விதைய பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்த ஜூலி குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை நடந்ததை நினைத்து மனம் வருந்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் குடும்பத்தில் பிரச்சனை வந்த நிலையில் வீட்டில் அனைவரும் வேலைக்குச் சென்ற சமயத்தில் ஜூலி மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் வீட்டின் வெளியே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்த தற்கொலை செய்து கொண்டார். மாலை வீட்டுக்கு வந்து பார்த்த கணவர் வீட்டில் முன்பக்க கேட் பூட்டப்பட்டு நீண்ட நேரம் மனைவியை அழைத்தும் வெளியே வராததால் முன்பக்கம் கேட்டின் பூட்டை உடைத்து வீட்டை திறந்து பார்த்ததும் அவர் இல்லாததால் வீட்டில் முன்புறம் இருந்த தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது அவர் விழுந்து நேரில் மூழ்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டனர். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜூலியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
