காலையிலேயே இபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த செங்கோட்டையன்… தவெகவில் இணையும் அதிமுக புள்ளிகள்… அடுத்த பரபரப்பு…!

By Nanthini on மார்கழி 12, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜயின் அரசியல் நகர்வு உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. திமுகவுக்கு தற்போது பெரும் போட்டியாக விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி மாறியுள்ளது. விஜய்க்கு மேலும் பலத்தை கூட்டும் வகையில் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் சமீபத்தில் விஜய் கட்சியில் இணைந்தார். இன்னும் சில அமைச்சர்களை கட்சியில் சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில் ஜனவரி மாதத்திற்குள் அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய தலைவர்களை தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என்று செங்கோட்டையன் சூளுரைத்துள்ளார். மேலும் தற்போது தமிழக வெற்றி கழகம் கட்சியை பலப்படுத்தும் பொறுப்பு தன்னுடையது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர்கள் எந்த பிரச்சனையாக இருந்தாலும் தன்னை தொடர்பு கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அவர் யாரையெல்லாம் தமிழக வெற்றி கலகம் கட்சிக்கு அழைத்து வர போகிறார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.